Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Wisdom from unbiased observation

One's perception may not be reality. Wisdom is associated with attributes such as unbiased judgment, cross-sectional observations, etc
காகிதத்திற்கு (கணினிக்கு) நான் கவிஞன்.
(நீங்களும்) எழுதுங்கள்! திருத்திக்கொள்ளலாம்.
Note: கணினி கசக்கிப்போட காகிதமல்ல
I am poet/writer for my paper/computer. Write what you feel. Can correct later.

Starting from my primary school and community, received lot of misinformation about neighbouring communities, towns, states and countries. This extends to race/caste/religion. Some are falsified as GODs and others as demons. Takes lot of effort to remove (biased views) from our subconscious mind. No one is good or evil. We all are human. We should teach reality and try to think logically rather than emotionally.

No need to prove anything! Better Try to Understand things!

Index - contents

  1. Introduction
  2. Truth
  3. Life Journey
  4. Friendship Relationship
  5. Love Compassion
  6. Suffering Poverty
  7. Desire Craving Minimalism
  8. Body Mind Spirit
  9. Food Vegetation Agriculture
  10. Searching Unknowns - Illusion
  11. Nature
  12. Unity - Diversity
  13. Impermanence
  14. Contrast Contradictions
  15. Spirituality
  16. Country Religion Community Race
  17. Language
  18. Media Notice Boards
  19. Great Popular
  20. Acting or Living
  21. Behavior
  22. Funny Conversation
  23. Luck fate
  24. Work Strategy
  25. Perfection - Accept mistakes errors
  26. Happiness
  27. Misc
  28. Greetings and wishes

கடவுள் வாழ்த்து[To TOP]

  1. அதுயின்றி எதுவுமில்லை - அதுகடந்து எதுவுமில்லை
    அதை கடவுள் இறைவன் பரம்பொருள் பரப்பிரம்மம் பெருமாள் ஹரி என்பர்
    அதை உணர்ந்து தியானம் செய்யலாம். அதை வணங்கலாம். அதனுடன் பேசலாம். அதைப்பற்றி பாடலாம், சிந்திக்கலாம், விவாதிக்கலாம்
    There is nothing with out it and nothing beyond it. That GOD is infinite, and so can have infinite definitions/views and infinite paths to understand/realize/reach GOD.
  2. (words in a line start with same letter)
    அறிவுக்கு அப்பாற்பட்ட அதை அடைவது ஆன்மீகம்
    அனைத்தையும் அன்பால் அரவணைப்பது ஆன்மீகம்
    விடையறியாத விஞ்ஞான வினாக்களுக்கு விடையது
    கலைஞர்கள் கற்சிலையில் கடவுளை காண்பவர்கள்
    அறிஞர்கள் அறநூல்களில் அ(ஹ)ரியை அறிபவர்கள்
    இசைஞானிகள் இசையில் இறைவனை இசைப்பவர்கள்
    பக்தர்கள் பக்தியால் பரவசத்துடன் பரப்பிரம்மத்தை பார்ப்பவர்கள்
    எல்லாருக்கும் எளிமையில் எட்டுவது எம்பெருமாள்

    *விடையறியாத வினாக்களுக்கு விடை தேடிக் கிடைத்தது விலையில்லா விவேகம்
    *விடையான பரம்பொருளை நம்பினவர்க்குத் துன்பத்திலிருந்து விடுதலை! கிடைத்தது பேரின்பம்

    Truth[To TOP]

  3. உண்மை பொய் என்று நிரூபிக்கப்படும் வரை, உண்மையாகவே இருக்கும். (Truth will remain true, till proven false)
  4. மெய்யைக்காண, பொய்யை மெய்யாக்கினேன்
    மெய்க்கு காவல் பொய்.
    While trying to find truth, Converted false/lie into truth. (easy path?)
    Truth is guarded by false.
  5. அடித்து திருத்தி எழுதிய காகிதம்
    அடித்தலில் மறைந்தன உண்மைகள்
    திருத்தலில் பிறந்தன பொய்கள்
    This is edited paper. Deletions have hidden truth and replaced with false.
  6. காண்பதும் கேட்டதும் உண்மையில்லை
    படித்ததெல்லாம் உண்மையில்லை
    பொய்மலையில் தொலைந்தது உண்மை
    உண்மையைத் தேடி ஆன்மிகப் பயணம்
    உண்மைக்கு அடையாளமில்லை
    (ஆன்மிகப்) பயணத்திற்கு முடிவில்லை
    What you see or hear need not be true. What you read from books need not be true. Truth is lost in mountain of lies. Spiritual journey in search of hidden truth. Truth may not be known. So Spiritual journey has no destination
  7. உண்மையை தேடிச் செல்லும் வழி எங்கும் பொய். முடிவில் உள்ள உண்மையை காணாமல், எல்லோரும் பாதி வழியில் திரும்பி விடுகிறார்கள்
  8. உண்மைக்கு பொய் என்னும் உடை அணிவித்து உலகெங்கும் உலாவ விடுகிறார்கள். ஆள் பாதி ஆடை பாதி என்று தமிழில் ஒரு பழமொழி. ஆனால் பொதுவாக ஆடையைத்தான் கவனிக்கிறார்கள். யாரும் ஆளைக் கவனிப்பதில்லை (cloth makes the man)
  9. பயந்துபோன உண்மை, பொய் என்னும் மலையில் ஒளிந்து கொண்டு இருக்கிறது. பொய்மலை பெரிதாகிக் கொண்டே போகிறது. உண்மை வெளி வருவது மிகவும் கடினம்.
  10. உண்மையும் பொய்யும் எப்பொழுதும் கலந்தே இருக்கும். அந்தக் கலவையில் பொய்யே அதிகம். உண்மையைப் பிரித்து எடுப்பது எளிதல்ல.

    Life Journey[To TOP]

  11. நீண்டுகொண்டே போகிறது நம் கதை
    இதுவே வாழ்க்கைப் பயணம்
    வழியெங்கும் வழிப்போக்கனுக்கு வழித்துணைகள்
    பயணமும் கதையும் சேர்ந்து முடியும்
    Our story is getting extended. That is journey of life. For wanderer, along the way, many companions. Journey and story will end at the same time.
  12. அறம் தழுவி பொருள் ஈட்டி
    இன்பமாய் வாழ்ந்து விடு
    Earn your livelihood by right ways/means, enjoy your life and leave the world happily
  13. Life is a game of snakes and ladders. In every aspect, money, health, career, we go up and down. In Life, there is no finishing line. It continues as long as you live. In the end, you can get a score card, how many points you get on each aspect.

    Friendship Relationship[To TOP]

  14. அன்பெனும் விதையில் வளர்ந்த நட்பு
    பேரின்பம் காய்க்கும் மரம்
  15. எதிர்பார்ப்புகள் இல்லாத தீங்கற்ற நட்பு
    வலுவான ஆலமரத்தின் வேர்
    with out expectations harmless friendship will be strong like roots of banyan tree
  16. பிழை பொறுத்தல் விட்டுக்கொடுத்தல் சகித்தல் மதித்தல்
    நட்பெனும் பயிருக்கு உரம்

    Love Compassion[To TOP]

  17. அன்பு செய்ய அன்பு மட்டுமே போதும்
    அன்பை விநியோகிக்க ஆயுதம் வாங்கும் காலம்
    Love/Compassion alone is enough to be Loving//Compassionate. Now weapons are bought/used to show love
  18. மரத்தை வெட்ட காவலாளியிடம் கேட்டார்கள்
    மரத்திடம் கேட்க வில்லை!
    All asked the guard permission to cut down the trees/plants. They never ask the trees/plants!
  19. இல்லை என்பவர்களிடம் பெரிதாக எதுவும் இருக்காது
    Those who say they have nothing, will not have anything worthwhile.
  20. ஆறிப்போன பழைய உணவு
    சுவைத்து உண்பது சமைத்தவர் மனம்
  21. துன்பம் கண்டு எதுவும் செய்யாதவர்
    நடக்கும் பயனில்லாப் பிணம்
    One who do nothing, seeing suffering, is an useless walking corpse.
  22. ஆட்டை காப்பாற்ற சென்றேன்
    கொன்று விட்டார்கள்
    வேறுவழியன்று இறைச்சி வாங்கி வந்தேன்
    I went to save the goat. They have killed it. So, I can only buy the meat
  23. கசாப்புக்கு கடையில் வரவேற்கும்
    'உயிர்களைக் கொல்லாதீர்' வாசகம்.

    Misery Suffering Poverty[To TOP]

  24. காலம் முழுவதும் ஓயாமல் உழைத்தவர்க்கு, முதியோர்/ஓய்வு இல்லத்தில் ஓய்வு
  25. அரிசியில் என் பெயரில்லை. அதனால் நான் பட்டினி!
  26. பாலில் குளிக்கும் பிள்ளையாரை, பசியுடன்பார்க்கும் பிள்ளை

    Desire Craving Minimalism[To TOP]

  27. தேவைகள் வாங்கப்பட்டுவிட்டன
    வாங்குவதை நிறுத்தக்காணோம்
    பொருளற்றவன் பொருள் உள்ளவன்
    All our needs have been purchased. We have not stopped buying
    One who has nothing (minimum things) is a person of substance
  28. எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்
    தேவையுள்ளதில் இருந்து மிகத் தேவையானதை
    Take as much as you want
    But take what is most needed from what is needed.

    Body Mind Spirit[To TOP]

  29. ஒரு உடலை (கூட்டை) விட்டது ஆன்மா, இத்தனை நாள் இடம் தந்ததற்கு நன்றி கூறிவிட்டு.
    After death, unknown soul leaves for unknown destination or journey.
  30. உயிர் இருக்கும் வரை, நான் இறப்பதை அனுமதிக்க மாட்டேன்
    As long as I am alive, I will not allow myself to die.
  31. என்னை முந்தி எப்போயுதும் விரைந்தோடுவது, என் மனது
    My mind is always hurrying ahead of me
  32. காரணம் இல்லாத கவலைகளுக்கு, கலக்கம் கொள்ள காரணம் இல்லை
    No reason to panic for worries without reason or cause

    Food Vegetation Agriculture[To TOP]

  33. அசை போடும் மாட்டின், வயிற்றுக்குள் என்றும் புல்வெளி.
    Forever grass (field) in the belly. The cow has four stomachs and undergoes a special digestive process to break down the tough and coarse food it eats. When the cow first eats, it chews the food just enough to swallow it. The unchewed food travels to the first two stomachs, the rumen and the reticulum, where it is stored until later.
  34. அழகான பூக்களை, உதிர்க்கும் உயர்ந்த மரங்கள்.
  35. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
    காராமிட்டவரை காலமெல்லாம் நினை.
    கசப்புணவை கஷ்டகாலத்தில் நினை. சில உண்மைகள் கசப்பானவை

    Searching Unknowns - Illusion[To TOP]

  36. தோற்றம் மாயம்.
    சித்தம் கலக்கம்.
    வேண்டுவது சாந்தம்.
    What is seen is illusion. Mind is always confused or agitated. What needed is peace (of mind) nothing else.
  37. பதில் இல்லாத கேள்விகள், கேள்விகளே அல்ல, புதிர்கள்!
    வாழ்க்கை ஒரு புதிர்
    புதிர்களுக்கு பதிலை எதிர்பார்க்காதீர்கள். பதிலை தேடுங்கள்
    பல கேள்விகளுக்கு பதில் கிடையாது
    Questions, which donot have answers/proper answers are not questions. They are Riddles/Puzzles!
  38. உண்மையை அறிய மனதை திறந்து வைத்து ஆராய்ச்சி செய்யுங்கள்
    மூடிய மனதில் ஒன்றும் போட முடியாது
    கண்ணை மூடிக்கொண்டு எதையும் எதையும் காண முடியாது
  39. கிடைக்குமென்று நம்பிக்கையில்லை
    ஆனாலும் தேடுகிறேன்
    No hope of finding it. But still searching or looking for it?
  40. தெரிந்தே தொலைந்திருக்கிறேன்
    தயவு செய்து தேடாதீர்கள்
    I have lost knowingly. Please do not search
  41. காட்டிய இடத்தில் எதுவுமில்லையே என்றார்
    எதுவுமில்லாததைத்தானே காட்டினேன் என்றேன்
    Said "nothing is in the place shown". I replied, "I showed nothing"
  42. உன்னுள் மூடியிருக்கும் பிரபஞ்சம் வெளியே தெரியாது
    திறக்க திறக்க உள்ளிருக்கும் பிரபஞ்சம் தெரியும்
    The universe that is enclosed within you, is invisible. The universe will be visible, when you open up.
  43. பொருள் அறியாது பொருள் தேடும், பொருள் அற்ற வாழ்விது

    Nature[To TOP]

  44. இயற்கை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து
    நல்ல இயற்கையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்
  45. எல்லாம் சேர்ந்த ஒன்று இயற்கை. அது ஒரு முழுமை.
    இறைவனின் உருவம் இயற்கை
    இயற்கை வைத்து மனிதன் படைப்பது செயற்கை
    இயற்கையையும் செயற்கையையும் இணைப்பது அறிவாற்றலா?
    இயற்கையை செயற்கையால் அறிந்து, இயற்கை உலகில் செயற்கையாய் வாழும் மக்கள்
  46. புண்ணகை இயற்கை. பொன்நகை செயற்கை.
  47. கதிரவன் மென்மையாய் பூமியை எழுப்ப
    தன் கருப்பு நிற உடையை கலைகிறது பகல்
    விடியல் வருமுன் அவசரமாய் நகர்கிறது விண்மீன்கள்
    விடியலை அறிவிக்க காத்திருக்கிறது பறவைகள்
    அமைதியாய் இருந்த ஊர் சத்தம் போட ஆரம்பிக்கறது
  48. மலையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிக்கு மரணமில்லை. நீர்வீழ்ச்சி பயப்படத் தேவையில்லை .

    Unity - Diversity[To TOP]

  49. சேர்த்துப் பார்ப்பது அறிவு. சேர்த்ததை பிரிப்பது மடமை
    Seeing all connected together is wisdom. Separating the connected ones is foolishness..

    Impermanence[To TOP]

  50. எல்லாமே நிலைத்து இருக்க வேண்டும்
    எல்லாமே தொடர்ந்து வரவேண்டும்
    பலவற்றையும் தொடந்து செல்லவேண்டும்
    தவிர்க்க வேண்டும் இந்த நினைவுகளை!
    Everything has to be permanent. Everything has to continue. I have to have or follow many things These are the feelings/wishes to be avoided!
  51. மரணம் சொல்லாமல் வருவதில்லை. நேரத்தை மட்டும் சொல்வதில்லை
    Death does not come without informing. But it just, never tells exact time
  52. பிணத்தை விரும்பி உண்ணுவது, மண்ணும் தீயும்

    Contrast Contradictions[To TOP]

  53. இருண்ட பௌர்ணமி. இன்று சந்திர கிரகணம்.

    Spirituality[To TOP]

  54. உண்மையைத் தேடி ஆன்மிகப் பயணம்.
    நான் யார் என்ற புதிருக்கு விடை தேடும் பயணம். பயணம் முடிவதில்லை
    Spirituality is a Life Journey seeking TRUTH. Seeking answer to one question, Who am I". Not sure about destination or destination is not important. Just Enjoy the Spiritual journey!
  55. Science is more than facts and patterns. Everything should be explained and proved. You should understand how one fact follows from another and (ideally) you should be able to continue till every thing is explained.
    is Spirituality a feeling/experience of connecting to something powerful than ourselves (beyond our knowledge)?
    But many things are not explained or understood. is Spirituality complementing Science, in understanding Unknowns or bling leading the blind?

    Country Religion Community Race[To TOP]

  56. அழிக்க வேண்டியதை ஆக்கிக்கொண்டிருப்பது மடமை
    காக்க வேண்டியதை அழிப்பது, அதைவிட மடமை
    Making things, which are to be destroyed is foolish. Destroying things, which are to be protected is more foolish.
  57. All countries (even states/provinces/towns) have territorial disputes/issues with neighbours?
    All communities/religions/organizations have difference of opinions?
    Are we over reacting, at times creating a crisis?
  58. இனம் இனத்தோடு சேரும்;
    பணம் பணத்தோடு சேரும்
    செல்வம் செல்வத்தைச் சேர்க்கும்
    வறுமை வறுமையைச் சேர்க்கும்
    பெருக்குவது பெருமையன்று
    வகுப்பது வறுமையன்று
  59. மதங்களைப் பற்றி படித்து அறிந்தது, எம்மதமும் சம்மதமே
  60. தேவன் ஓதுவதும் வேதம். சாத்தான் ஓதுவதும் அதே வேதம்
  61. Country in decline:
    அன்று சான்றோரை வரவேற்று சிறப்படைந்தனர்
    நல்லாட்சி புரிந்து செல்வ நாடாக்கினர்
    இன்று யாவரும் ஒழிக என்று நாட்டை ஒழித்தனர்
    சிறந்தவரை விரட்டி சீரழித்தனர்
    ஊழல் புரிந்து பிச்சைக்கார நாடாக்கினர்

    Language[To TOP]

  62. எறும்புகளுக்கு ஒரே மொழி. வரிசையாக செல்லும் எறும்புகள்
  63. Language is for communication and to preserve knowledge
    மொழி ஓர் இணைப்புக் கருவி.
    மொழி நம் வாழ்க்கைக்காக. நாம் வாழ்வது மொழிக்காக அல்ல!
    மொழி புலவர்களுக்காக மட்டும் அல்ல! சாமானிய மக்களுக்கும்?
    மொழிக்கு இனம் மதம் இடம் எதுவும் கிடையாது
    மொழியைக் கற்கவும் பயன்படுத்தவும் அனுமதி பெறவோ அல்லது ராயல்டி செலுத்தவோ தேவையில்லை
  64. உலகின் முதல் மொழி எது?
    எளிதான பதில்: கேள்வி கேட்டவரின் மொழி.
    ஆறு போவதே போக்கு. அரசன் சொல்வதே தீர்ப்பு.
  65. மொழிகள் பெரிய வலை, அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன
    There are 6,000 languages. They are always changing, and these changes produce dialects. At the same time, all the world’s languages and dialects mix with each other—that’s a natural process.

    Media Notice Boards[To TOP]

  66. அனுமதி பெற்று உள்ளே வரவும்
    அனுமதி பெறாமல் வெளியேறலாம்
    Get/Need permission to enter. Can leave without permission
  67. வண்ணானுக்கு அமோக வரவேற்பு
    வாசலில் வாஷிங் மெஷின்.
  68. சிகரெட் பெட்டியில் எச்சரிக்கை.
    உள்ளே காத்திருக்கும் பரிசு அட்டை

    Great Popular[To TOP]

  69. யார் யாரையோ புனிதர்களாக்கி/பிரபலமாக்கி விட்டோம்
    அவர்கள் தங்களைக் கடவுளாக்கிக் கொண்டார்கள்
    We made some (random?) persons to be saints/popular/celebrity.
    They have made themselves GOD. Great/Popular are made Great/Popular. They may not be Great/Popular
  70. யாரும் சொல்லாததை நான் சொல்லவில்லை.
    எல்லோரும் சொல்லி விட்டதால் நான் சொல்லாமலில்லை
    I did not tell any thing new (what has not been told). Still I shall repeat.
    *Popular speakers tell things to people, who know that before. But it looks new to them every time, make it a great speech. Many will add their own stuff (imagination/creation) to make it spicy.

    Behavior[To TOP]

    Funny Conversation[To TOP]

  71. நீங்கள் சொல்லி இருக்கலாமே என்றார்
    நீங்கள் கேட்கவில்லையே என்றேன்
    You: You might have said that
    I: You never asked
  72. நிலவுடன் பேசிக் கொண்டிருந்தது, இருட்டின் கதைகளை.

    Acting or Living[To TOP]

  73. நமது வேடங்கள் தீர்மானிக்கப்பட்டு விட்டன
    ஒப்பனையெ இன்னும் முடியவில்லை
    Our roles in Life Drama have been determined Still, the makeup is not over.
  74. நாடகம் முடிந்த பின்னும்
    ஏன் நடித்துக் கொண்டிருக்கிறேன்?

    Luck fate[To TOP]

  75. விதியை உருவாக்குபவர்களை விதி ஒன்றும் செய்வதில்லை
    Destiny/Fate does nothing to those, who create destiny

    Work Strategy[To TOP]

  76. போட்டியிடாதவனை யாரும் தோற்கடிக்க முடியாது/வேண்டாம்
    அவன் தன்னிடமே தோற்றுவிட்டான்.
    No one can or need to defeat a non-competitor. He has lost to himself.
  77. பாயத் தயாராக இருங்கள்
    பாய்வது போல் பாவனை செய்யுங்கள்
    பாயத் தேவை இருக்காது
    Get ready to attack/pounce. Pretend to attack/pounce. There will be no need to attack/pounce
  78. மீனில்லாத குளத்திலும்
    காத்து கொண்டிருக்கும் சில கொக்குகள்.
  79. Work place wisdom (Tested from few jobs):
    1) Work place is like a circus. Animals obey/behave properly with ring master to get rewards (cookies) or whipped for unacceptable behavior. (There is no good or bad behavior. But only acceptable and unacceptable behavior).
    2) Other alternate is escape from this circus to other circus to work with other ringmaster. All circus have published and unpublished norms on acceptable and unacceptable behavior
    3) Some lucky/smart ones can escape to wild to survive in harsh nature.

    Perfection - Accept mistakes errors[To TOP]

  80. Teacup tells about the tea as well as the person who made it.
    Difference between any person and an expert lies in details.
  81. கண்ணாடியில் பார்த்த அழுக்கைத் துடைத்துக் கொண்டே இருக்காதீர்கள்
    அழியாமல் தெரிவது உங்கள் அழுக்கு
    Do not keep on wiping the dirt seen in the mirror. You are seeing dirt seen on you, which can not be erased.
  82. மன்னிப்புக் கிடைத்து விட்டது
    மறுபடியும் தவறு செய்யலாம்
    Have been pardoned. Can make mistake again.

    Happiness Hope Living in Present[To TOP]

  83. கடந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது, வருந்துவதற்கில்லை.
    கடந்ததை ரசிப்பதற்கு !. கடந்ததைக் களிப்பதற்கு !
    Looking back on the past, is not for feeling regret/sorry.
    To enjoy and cherish the past!
  84. வாழ்ந்த வாழ்கையில் குறையொன்றுமில்லை
    நாளைய வாழ்க்கையை இன்றே வாழ்வதில் துளியும் பயனில்லை.
    வாழ்கையில் அமைதியைத் தவிர எதுவும் பெரிதில்லை.
    There is nothing wrong with past life. There is no point in worrying about tomorrow. There is nothing greater than peace in life.
  85. நமக்கு கால்நனைக்க துன்பம்
    சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மீன்கள்!

    Misc[To TOP]

    Greetings and wishes[To TOP]

Closing Remarks


கற்றேன் கல்விமானல்ல
கவிபாடுவேன் கவிஞனல்ல.
கற்பனைத்திறனுண்டு கலைஞனல்ல
(நான்) கணினிக்கு கல்விமான்
காகிதத்திற்கு கவிஞன்.
கண்ணாடிமுன் கலைஞன்

எனக்குள் முடிவில்லாப் போட்டி
எனக்குள் ஒரு உலகமுண்டு
பிரச்சனையில்லா அமைதி
I compete with myself. Try to improve and add to endless collection. This is my personal peaceful space

Thanks for reading[To TOP]


Email Contact... Website maintained by: NARA
Terms and Usage